பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட்டர்களை விட மல்யுத்த வீரர்கள் தான் அதிகமா இருக்காங்க! முன்னாள் வீரர் கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 10:18 PM IST
Highlights

பாகிஸ்தான் டி20 அணியில் கிரிக்கெட் வீரர்களை விட மல்யுத்த வீரர்கள் தான் அதிகமாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் விமர்சித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் தோற்றது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் அந்த தோல்வி, அந்நாட்டு முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இன்சமாம் உல் ஹக், ஷோயப் அக்தர் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் மிகக்கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் ஆடவுள்ள நிலையில், பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஃபிட்னெஸை விமர்சித்துள்ளார் ஆகிப் ஜாவேத்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகிப் ஜாவேத், பாகிஸ்தான் அணி என்ன செய்து கொண்டிருக்கிறது, பாகிஸ்தான் வீரர்களும் அணியும் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. பாகிஸ்தான் டி20 அணியில் கிரிக்கெட்டர்களை விட அதிகமான மல்யுத்த வீரர்களைத்தான் பார்க்கிறேன். ஷர்ஜீல் கான், அசாம் கான், சொஹைப் மக்சூத் ஆகியோர் சர்வதேச அளவில் ஆடுவதற்கான ஃபிட்னெஸை பெற்றிருக்கிறார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளதாக ஆகிப் ஜாவேத் விமர்சித்துள்ளார்.
 

click me!