#WIvsAUS கடைசி டி20: வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் ஆஸி.,! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 9:12 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி ஜூலை 17ம் தேதி காலை 5 மணிக்கு தொடங்கி நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி டி20யில் ஜெயித்து 2-3 என மரியாதையாக தொடரை இழக்கத்தான் விரும்பும். எனவே கடைசி டி20 போட்டியில் வெற்றி முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியை தங்களது சொந்த மண்ணில் 4-1 என வீழ்த்தவே வெஸ்ட் இண்டீஸ் விரும்புகிறது.

எனவே இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், நிகோலஸ் பூரன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஃபேபியன் ஆலன், ஹைடன் வால்ஷ், அகேல் ஹுசைன், ஷெல்டான் காட்ரெல், ஒஷேன் தாமஸ்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அஷ்டான் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ரிலே மெரிடித், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.

click me!