பேட்டிங்கில் அசத்திய தாஸ்; பவுலிங்கில் மிரட்டிய ஷகிப் அல் ஹசன்! முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 8:40 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி.
 

லிட்டன் தாஸ் 102 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன் சிறப்பாக ஆடி 45 ரன்களும், மெஹிடி ஹசன் 26 ரன்களும் அடித்தனர்.

வங்கதேச அணி 50 ஓவரில் 276 ரன்களை குவித்தது. இதையடுத்து 277 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா மட்டுமே ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல் ஷகிப் அல் ஹசனின் அபாரமான சுழலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிகச்சிறப்பாக பந்துவீசிய ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, 29வது ஓவரில் வெறும் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.

இதையடுத்து 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணியில் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!