
தென்னாப்பிரிக்க அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து 3வது ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் ஜே மலான் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அடித்து ஆடி மிக மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
அதிரடியாக ஆடிய டி காக், மலான் ஆகிய இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அடித்து ஆடி மிக மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
அதிரடியாக ஆடிய டி காக், மலான் ஆகிய இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 225 ரன்களை குவித்தனர். டி காக் 91 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 120 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய மலான் சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடி 169 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
டி காக், மலானின் அபாரமான பேட்டிங்கால், 50 ஓவரில் 346 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 347 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்த நிலையில், அந்த இலக்கை அயர்லாந்து அணி விரட்டிவருகிறது.