#ENGvsPAK முதல் டி20: இதுலயாவது ஜெயிக்கணும்.. இல்லைனா பயங்கர அசிங்கமாயிடும்! வெற்றி வேட்கையில் பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 9:52 PM IST
Highlights

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் தோற்றது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் அந்த தோல்வி, அந்நாட்டு முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணி, டி20 தொடரிலாவது சிறப்பாக ஆடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. முதல் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 11 மணிக்கு தொடங்குகிறது. டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, டேவிட் வில்லி, லெவிஸ் க்ரெகோரி, சாகிப் மஹ்மூத், அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சொஹைப் மக்சூத், அசாம் கான், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஹாரிஸ் ரௌஃப்,  ஷாஹீன் அஃப்ரிடி.
 

click me!