India vs Sri Lanka: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் டெஸ்ட் ஓபனரின் தேர்வு

Published : Mar 11, 2022, 03:40 PM ISTUpdated : Mar 11, 2022, 04:06 PM IST
India vs Sri Lanka: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் டெஸ்ட் ஓபனரின் தேர்வு

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு, வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

மொஹாலி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி:

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மொஹாலியில் நடந்தது. அந்த மொஹாலி டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை(மார்ச் 12) தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. பகலிரவு போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பிங்க் பந்து பயன்படுத்தப்படும்.

இதையும் படிங்க - Lasith Malinga: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்த டெஸ்ட்டிலும் வெற்றி பெறுவது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5ம் இடத்திலிருந்து மேலே செல்வதற்கு முக்கியம். எனவே இந்திய அணி வெற்றி வேட்கையில் உள்ளது.

அக்ஸர் படேல்:

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றத்தை வாசிம் ஜாஃபர் பரிந்துரைத்துள்ளார். 10 வீரர்கள் உறுதி. பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான 11வது வீரராக அக்ஸர் படேல் - முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார் என்றும் அந்த வீரர் அக்ஸர் படேலாக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - Pakistan vs Australia முதல் டெஸ்ட் நடந்த ராவல்பிண்டி பிட்ச் மொக்கை பிட்ச்னு ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்

ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்படுவார் என்பது ஜாஃபரின் கருத்து. அக்ஸர் படேல் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில்  11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல்/முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா(துணை கேப்டன்).
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?