Lasith Malinga: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

Published : Mar 11, 2022, 03:20 PM IST
Lasith Malinga: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கட்டமைப்பு:

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரையும் தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய பல சிறந்த வீரர்களை எடுத்தது. 

லசித் மலிங்கா நியமனம்:

சஞ்சு சாம்சன் தலைமையில் வலுவான அணியை கட்டமைத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை (170) வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலரான லசித் மலிங்காவை நியமித்துள்ளது.

ஐபிஎல்லின் வெற்றிகரமான பவுலர் மற்றும் மிகப்பெரிய மேட்ச் வின்னர் லசித் மலிங்கா. ஐபிஎல்லில் ஒரே அணிக்காக மட்டுமே ஆடிய சாதனைக்குரிய வீரர் லசித் மலிங்கா. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை ஆடிய மலிங்கா, அனைத்து சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே ஆடினார். மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற நிலையில், அதில் 4 கோப்பைகளை வென்றதில் மலிங்காவின் பங்களிப்பு அபரிமிதமானது.

ஐபிஎல்லில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் என்ற முறையில், ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களுக்கு, அந்த வித்தையை மலிங்கா சொல்லிக்கொடுப்பார் என்பதால், மலிங்காவின் நியமனம் அந்த அணிக்கு பலம் சேர்க்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?