ஐபிஎல்லின் ஆல்டைம் வலுவான பிளேயிங் லெவன்.. வாசிம் ஜாஃபரின் தேர்வு..! ரோஹித், ஏபிடிக்கு அணியில் இடம் இல்லை

By karthikeyan V  |  First Published May 31, 2022, 9:06 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் ஆல்டைம் வலுவான லெவனை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
 


ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 15வது சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் சாம்பியன் அணிகளாக திகழ்வதுபோல் சில வீரர்களும் ஐபிஎல்லில் சாம்பியன் வீரர்களாக திகழ்ந்தனர்/திகழ்கின்றனர். கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, மலிங்கா, பும்ரா ஆகிய வீரர்கள் சாம்பியன் வீரர்கள் ஆவார்கள்.

Tap to resize

Latest Videos

இந்த சீசனின் சிறந்த லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். இந்நிலையில், முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஆல்டைம் ஐபிஎல் வலுவான லெவனை தேர்வு செய்துள்ளார். 

கிறிஸ் கெய்ல் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் ஆல்டைம் ஐபிஎல் வலுவான லெவனின் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் ரெய்னா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார்.

5 முறை கோப்பையை வென்ற கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் ஐபிஎல்லின் சாம்பியன் பிளேயரான மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ் ஆகிய இருபெரும் வீரர்களையும் வாசிம் ஜாஃபர் தனது வலுவான லெவனில் எடுக்கவில்லை. ஃபினிஷர்களாக ஆல்ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். 

ஸ்பின்னர்களாக ரஷீத் கானுடன், அஷ்வின் - சாஹல் ஆகிய இருவரில் ஒருவரையும் தேர்வு செய்துள்ளார் ஜாஃபர்.  ஃபாஸ்ட் பவுலர்களாக மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஐபிஎல் ஆல்டைம் வலுவான லெவன்:

கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ரவிச்சந்திரன் அஷ்வின்/யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா.

click me!