IND vs SA: டி20 தொடர் தொடங்கும் முன்பே இந்திய பவுலரை கண்டு நடுங்கும் தென்னாப்பிரிக்க அணி.!

By karthikeyan VFirst Published May 31, 2022, 5:28 PM IST
Highlights

எந்தவொரு பேட்ஸ்மேனும் 150 கிமீ வேகத்தில் வரும் பந்தை எதிர்கொள்ள விரும்பமாட்டார் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக ஜூன் 9ம் தேதி முதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் நடக்கிறது. இந்தியாவிற்கு வந்து தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அப்படி இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் முக்கியமானவர் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்.

ஐபிஎல்லில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் 2வது அதிவேக பந்தை வீசினார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான் ஃபைனலுக்கு முன் வரை அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் ஃபைனலில் 157.3 கிமீ வேகத்தில் ஒருபந்தை வீசி அவரை முந்தினார் ஃபெர்குசன்.  

இந்தசீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 14 லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை உம்ரான் மாலிக்கே வீசியிருந்தார். 150 கிமீ வேகத்திற்கு  மேல் அசால்ட்டாக வீசும் உம்ரான் மாலிக், தனதுஅதிவேகமான பவுலிங்கால் எதிரணி வீரர்களை அலறவிட்டார். இந்தசீசனில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்ததுடன், ஐபிஎல் 15வது சீசனின் முடிவில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் பெற்றார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, உம்ரான்மாலிக் குறித்து பேசியுள்ளார்.

உம்ரான் மாலிக் பற்றி பேசிய டெம்பா பவுமா, உம்ரான் மாலிக் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் சொத்து. மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை அடையாளம் காண, இந்திய கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் அருமையான வாய்ப்பு. 

தென்னாப்பிரிக்காவில் நாங்கள் அனைவரும் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொண்டே வளர்ந்தவர்கள் தான். ஆனால் எந்த பேட்ஸ்மேனும் 150 கிமீ வேகத்தை எதிர்கொள்ள விரும்பமாட்டார். ஆனால் அதற்கு தயாராக வேண்டும்.  எங்களிடமும் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு கிடைத்த ஸ்பெஷல் டேலண்ட் என்று டெம்பா பவுமா புகழ்ந்து பேசியுள்ளார்.
 

click me!