இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஆர்டர் இதுதான்..! அப்ப செம கச்சேரி கன்ஃபாம்

Published : May 31, 2022, 04:11 PM IST
இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஆர்டர் இதுதான்..! அப்ப செம கச்சேரி கன்ஃபாம்

சுருக்கம்

இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை 4வது பேட்டிங் ஆர்டரில் இறக்கிவிடலாம் என்று நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் ஹர்திக் பாண்டியா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 2 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் சரியாக இல்லாததால் இந்திய அணியில் இடத்தை இழந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்டார்.

இதையடுத்து அவரை ஏலத்திற்கு முன் வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக நியமிக்க, அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. எப்படி பேட்டிங் ஆடப்போகிறார், பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸில் இருக்கிறாரா என்பன போன்ற சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன.

அவற்றிற்கெல்லாம் முதல் சில போட்டிகளிலேயே தனது அருமையான ஆட்டத்தின் மூலம் பதிலளித்துவிட்டார் பாண்டியா. அதை சீசன் முழுவதும் தொடரவும் செய்தார். பேட்டிங்கில் 4ம் வரிசையில் அபாரமான மற்றும் பொறுப்பான பேட்டிங், பவுலிங்கில் அணிக்கு தேவைப்படும்பொழுது சிறப்பான ஸ்பெல்கள் என அசத்தினார் பாண்டியா.

பேட்டிங், பவுலிங்கைவிட ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் பட்டைய கிளப்பியது கேப்டன்சியில் தான். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், நெருக்கடியான சூழல்களை கையாண்ட விதம் என கேப்டன்சியின் அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தார். இதற்கு முன் கேப்டன்சி அனுபவம் இல்லாத அவரிடமிருந்து இந்தளவிற்கு சிறப்பான கேப்டன்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை.

பேட்டிங்கில் இந்த சீசனில் 4ம் வரிசையில் ஆடி 131 என்ற ஸ்டிரைக்ரேட்டில் ஆடி 487 ரன்களை குவித்தார் பாண்டியா. இந்த சீசனில் அருமையாக ஆடியதன்விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும்நிலையில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஆர்டர் குறித்து நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, ஹர்திக் பாண்டியாவை 4ம் வரிசையில் இறக்குங்கள். அதுதான் அவருக்கு பொருத்தமான பேட்டிங் ஆர்டர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் 4ம் வரிசையில் இறக்கப்பட்டிருக்கின்றனர். பாண்டியாவை இறக்கும் ஆப்சன் இருந்தால் அது சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போதைக்கு பார்க்கும்போது பாண்டியா 5ம் வரிசையிலும் ரிஷப் பண்ட் 6ம் வரிசையிலும் இறக்கப்படுவார்கள் என நினைக்கிறேன் என்று வெட்டோரி கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!