IPL 2022: மற்ற முன்னாள் வீரர்களை விட சற்றே வித்தியாசமான பெஸ்ட் லெவனை தேர்வு செய்த பீட்டர்சன்

By karthikeyan VFirst Published May 31, 2022, 8:02 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
 

ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.

இந்த சீசனின் சிறந்த லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். முன்னாள் வீரர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான லெவனைத்தான் தேர்வு செய்தனர். ஆனால் கெவின் பீட்டர்சன் மட்டும் சற்றே வித்தியாசமான லெவனை தேர்வு செய்துள்ளார்.

ஜோஸ் பட்லர் மற்றும் டி காக் ஆகிய இருவரையும் இந்த சீசனின் சிறந்த தொடக்க வீரர்களாக பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார். டி காக்கை இதுவரை யாருமே தேர்வு செய்யவில்லை. 3ம் வரிசையில் கேஎல் ராகுல், 4ம் வரிசையில் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்த பீட்டர்சன், கோப்பையை வென்ற பாண்டியாவையே கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அதற்கடுத்த வரிசைகளில் மில்லர் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரையும் தேர்வு செய்த பீட்டர்சன், யாருமே தங்கள் லெவனில் தேர்வு செய்யாத அஷ்வினை எடுத்துள்ளார்.

மேலும் மற்ற ஸ்பின்னர்களாக ராகுல் டெவாட்டியா மற்றும் சாஹல் ஆகியோரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக உம்ரான் மாலிக் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஷமி, பும்ரா ஆகியோரை பீட்டர்சன் தேர்வு செய்யவில்லை.

கெவின் பீட்டர்சன் தேர்வு செய்த ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவன்:

ஜோஸ் பட்லர், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் டெவாட்டியா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!