இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று வாசிம் அக்ரம் ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலக கோப்பை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கிறது. வேறு எந்த நாட்டின் சேர்க்கை இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்தியாவில் நடத்தப்படும் முதல் ஒருநாள் உலக கோப்பை இதுதான்.
இதற்கு முன் 1987ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தின. 1996 உலக கோப்பை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் நடந்தது. 2011 ஒருநாள் உலக கோப்பையை இந்தியா - வங்கதேசம் - இலங்கை இணைந்து நடத்தின. இந்நிலையில், இந்த ஆண்டு உலக கோப்பை முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்கிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் நடத்தப்படும் முதல் உலக கோப்பை தொடர் இதுதான்.
கடைசியாக 2011ம் ஆண்டு இந்திய மண்ணில் தோனி தலைமையில் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்தியா உட்பட அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.
உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய துணைக்கண்ட கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இந்திய கண்டிஷனும் ஆடுகளங்களும் கொஞ்சம் சவாலானதாக இருந்தாலும் கூட, இந்திய கண்டிஷனுக்கு இப்போது அந்த சாம்பியன் அணிகள் பழக்கப்பட்டுவிட்டன. இந்திய மண்ணில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறுகின்றன.
இந்நிலையில், இந்த உலக கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து பேசிய வாசிம் அக்ரம், இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளும் மிகச்சிறந்த அணிகள். பாகிஸ்தான் கேப்டன் கிரேட் பிளேயர். உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.
ஷாஹீன் அஃப்ரிடி 2வது முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டைட்டிலை வென்றார். பேட்டிங்கிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஒரு ஆல்ரவுண்டராக வளர்ந்துள்ளார். ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவும் இருக்கிறார்கள். முகமது ஹஸ்னைன் மற்றும் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஈசானுல்லா ஆகிய திறமையான பவுலர்களும் உள்ளனர். உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால், வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கொண்ட பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமாக திகழும்.
அந்த 2 பசங்க மட்டும் தான் என்னைப்போல் அதிரடியா ஆடுறானுங்க..! வேற யாருமே இல்ல.. சேவாக் அதிரடி
இங்கிலாந்தும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிதான். 2019 உலக கோப்பையை இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் வென்றது. இந்திய கண்டிஷன் சற்று சவாலானதாக இருந்தாலும் கூட இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. இங்கிலாந்திடம் இப்போது நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். நல்ல வெரைட்டியான ஃபாஸ்ட் பவுலர்களும் உள்ளனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டுவிட்டார். மார்க் உட் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர். எனவே அனுபவம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி திகழ்கிறது. ஆனாலும் இந்தியாவில் இந்திய அணி தான் அபாயகரமான அணி. ஆக்ரோஷமாக ஆட ஆரம்பித்துவிட்டால் இந்திய அணியை கட்டுப்படுத்தவே முடியாது. மிகவும் அபாயகரமான அணியாக திகழும் என்று வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார்.