கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள்.. வாசிம் அக்ரமின் தேர்வு..! கடைசி இடத்தில் சச்சின்

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 8:34 PM IST
Highlights

கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்களை வாசிம் அக்ரம் தேர்வு செய்துள்ளார். 
 

வாசிம் அக்ரம் ஆல்டைம் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு அதிகமாகவும், அருமையாக ஸ்விங்கும் செய்து வீசக்கூடியவர். வேகமும் ஸ்விங்கும் கலந்து வீசுவதால், அவரது பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின், லாரா, ஜெயசூரியா போன்ற பெரிய பெரிய ஜாம்பவன்களே திணறியுள்ளனர். 

பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 916 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் முதன்மையானவரான வாசிம் அக்ரம், ஆல்டைம் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்ற தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

வாசிம் அக்ரம் தேர்வு செய்த பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள்:

1. விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

2. மார்டின் க்ரோவ் (நியூசிலாந்து)

3. பிரயன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)

4. இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)

5. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

விவியன் ரிச்சர்ட்ஸ், 187 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6721 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட் 90.17. அவர் ஆடிய காலக்கட்டத்தில், இந்த ஸ்டிரைக் ரேட் மிக அதிகம். 121 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8540 ரன்களை குவித்துள்ளார் விவியன் ரிச்சர்ட்ஸ். 

நியூசிலாந்தின் மார்டின் க்ரோவ், 77 டெஸ்ட் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 5444 மற்றும் 4704 ரன்களையும் குவித்துள்ளார். 

பிரயன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஜாம்பவான்கள் இவர்களும் இருவரும் என்பதை யாருமே மறுக்கமாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதங்களை விளாசி, அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஆனால் சச்சினை இந்த பட்டியலில் கடைசி பேட்ஸ்மேனாக தேர்வு செய்து, இன்சமாமை அவருக்கு முன்பாக நான்காவது இடத்தில் பட்டியலிட்டுள்ளார் வாசிம் அக்ரம். 

இன்சமாமுக்கு அடுத்து சச்சினை பட்டியலிட்டது வேண்டுமென்றே பாரபட்சமாக செய்த தேர்வு. சச்சினை விட இன்சமாம் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பது வாசிம் அக்ரமின் தனிப்பட்ட கருத்துதான். ஆனால் இதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 

click me!