இந்தியாவிற்கு எதிராக பாபர் அசாம் ஒரேயொரு தவறு செய்துவிட்டார்.. ஆனால் அது பெரிய தவறு! வாசிம் அக்ரம் கருத்து

By karthikeyan VFirst Published Aug 29, 2022, 9:54 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தவறிழைத்துவிட்டதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

 முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனும் நட்சத்திர வீரருமான பாபர் அசாமை வெறும் 10 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஃபகர் ஜமானும் 10 ரன்களில் அவுட்டானார். பாபர் அசாம் அவுட்டானதால் முகமது ரிஸ்வானால் தனது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. மந்தமாக பேட்டிங் ஆடிய ரிஸ்வான் 42 பந்தில் 43 ரன்கள் அடித்தார். 

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்னுதான் பேரு.. 2 பேருமே மொக்கை ஷாட் ஆடி அவுட்டாகிட்டாங்க..! கவாஸ்கர் கடும் தாக்கு

பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர்கள் மூவரில் ஒருவரும் சரியாக ஆடாததால் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை அடித்து அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் பாபர் அசாம் செய்த தவறுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார். 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை 8வது ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்திய ஸ்பின்னர் முகமது நவாஸ், அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தில் கோலியை வீழ்த்தினார்.

இதையும் படிங்க - பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்

ஆனால் அதன்பின்னர் அவருக்கு 13 அல்லது 14வது ஓவரை கொடுத்திருந்தால் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை எடுத்திருப்பார். ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கலாம். ஆனால் ஆட்டத்தின் அந்த கட்டத்தில் கேப்டன் பாபர் அசாம் முகமது நவாஸுக்கு பவுலிங் கொடுக்காதது தவறு. டி20 கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களை கடைசி 4 ஓவர்களில் வீசவைப்பது சரியாக இருக்காது என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

click me!