டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வர் குமார் புதிய சாதனை..! ஹர்திக் பாண்டியாவின் சாதனை தகர்ப்பு

By karthikeyan VFirst Published Aug 29, 2022, 8:01 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையும் படிங்க - பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, விராட் கோலி (35), ஜடேஜா (35) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஃபினிஷிங்கால் (17 பந்தில் 33 ரன்கள்) கடைசி ஓவரில் இலக்கை அடித்து இந்திய அணி  வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் 26 ரன்கள் மட்டுமே  விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த பவுலிங்கை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க - இந்தியாவிடம் தோற்றதற்கு இதுதான் காரணம்.. நான் பலமுறை சொல்லியும் நீங்க கேட்கல..! பாக்., அணியை விளாசிய அக்தர்

இதற்கு முன், 2016 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அதை புவனேஷ்வர் குமார் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
 

click me!