சீனியர் பிளேயர்ஸ்னுதான் பேரு.. 2 பேருமே மொக்கை ஷாட் ஆடி அவுட்டாகிட்டாங்க..! கவாஸ்கர் கடும் தாக்கு

By karthikeyan V  |  First Published Aug 29, 2022, 7:14 PM IST

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அவுட்டான விதத்தை சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 


ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - பழைய பகையை மறந்து மஞ்சரேக்கரை மன்னித்து ஏற்ற ஜடேஜா..! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த சுவாரஸ்யம்

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, அந்தசூழலுக்கு ஏற்ப பொறுமையுடன் ஆடி 35 ரன்கள் அடித்தார். ஆனால் அவர் அவுட்டான விதம் அதிருப்தியளித்தது. முகமது நவாஸ் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்தில் தான் ரோஹித் சர்மா அவுட்டாகியிருந்தார். முகமது நவாஸ் அடுத்து வீசிய 10வது ஓவரின் முதல் பந்தில் கோலி ஆட்டமிழந்தார்.

முகமது நவாஸ் வீசிய பந்தை ஓங்கியும் அடிக்காமல், கேப்பிலும் அடிக்காமல், சும்மா அலட்சியமாக தூக்கியடித்தார் கோலி. கோலி அடித்த பந்து நேராக  இஃப்டிகார் அகமதுவிடம் சென்றது. அவர்  கேட்ச் பிடிக்க 9.1 ஓவரில் இந்திய அணி 53 ரன்கள் அடித்திருந்தபோது 35 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார். கோலி மட்டுமல்லாது ரோஹித்தும் மோசமான ஷாட்டை ஆடித்தான் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி  வெற்றி பெற்றிருந்தாலும், சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலி அவுட்டான விதம் அதிருப்தியளித்தது. மேலும், ஆரம்பத்திலேயே கேட்ச், இன்சைட் எட்ஜ் ஸ்டம்ப்பில் படாமல் தப்பியது என பல வாய்ப்புகள் கோலிக்கு கிடைத்தது. அதையும் அவர் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இதையும் படிங்க - இந்தியாவிடம் தோற்றதற்கு இதுதான் காரணம்.. நான் பலமுறை சொல்லியும் நீங்க கேட்கல..! பாக்., அணியை விளாசிய அக்தர்

இந்நிலையில், கோலி - ரோஹித் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கோலிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன; இன்சைட் எட்ஜ் ஆன பந்துகளும் ஸ்டம்ப்பில் படாமல் தப்பினார். அதை பயன்படுத்திக்கொண்டு சில நல்ல ஷாட்டுகளை ஆடினார் கோலி. ஆனால் அந்த மாதிரி தொடக்கம் கிடைத்தால் 60-70 ரன்களாவது அடிக்க வேண்டும். 

ரோஹித் ஆட்டமிழந்ததும் கோலியும் உடனடியாக ஆட்டமிழந்தார். இருவருமே மோசமான ஷாட்டுகளை ஆடித்தான் ஆட்டமிழந்தார்கள். அவர்கள் ஆட்டமிழந்த கட்டத்தில் பெரிய ஷாட்டுகள் ஆடவேண்டிய அவசியமே இல்லை. தேவைப்பட்ட ரன்ரேட் ஒன்றும் 19 அல்லது 20 இல்லை. நிதானமாக ஆடினாலே வெற்றி பெறக்கூடிய இலக்குதான் அது. அதை விரட்டும்போது அந்த மாதிரியான ஷாட்டுகள் தேவையில்லை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

click me!