#INDvsPAK ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே இந்தியாவின் அலப்பறை தாங்க முடியலயே.. அவசரப்படாதீங்க என அக்ரம் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Oct 24, 2021, 5:07 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவதற்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவதாக தெரிவித்துள்ள வாசிம் அக்ரம், அவசரப்பட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டி என்றால் பொதுவாகவே களைகட்டும். அதிலும் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அலப்பறைகளுக்கும், எதிர்பார்ப்பிற்கும், வெற்றி கொண்டாட்டத்திற்கும், மோதல்களுக்கும் பஞ்சமே இருக்காது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் அலப்பறைகள் வேற  லெவலில் இருக்கும்.

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 100 சதவிகித வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இதுவரை உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ள நிலையில், அதில் 7 முறையுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதியிருக்கின்றன. அதில் 5 முறையுமே இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே அந்த ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்தியாவின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இதையும் படிங்க - T20 World Cup அவனுக்கு மட்டும் பந்து பேட்டில் மாட்டிகிட்டா இந்தியா ரொம்ப ஈசியா ஜெயிச்சுரும்..! சேவாக் அதிரடி

இந்த போட்டி குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவதற்கு ஒருநாளைக்கு முன்பாகவே இந்தியாவில் வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். வெற்றி பெறுவதற்கு முன்பாகவே இந்தியாவில் வெற்றி கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்றதை இந்தியா மறந்துவிடக்கூடாது. போட்டியை ஜெயித்துவிட்டு கொண்டாடுங்கள் பிரச்னையில்லை. பாகிஸ்தானுக்கும் அதே தான். போட்டியில் ஜெயித்துவிட்டு கொண்டாடலாம். ஆனால் ஜெயிப்பதற்கு முன்பே கொண்டாடுவது அபத்தம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

click me!