T20 World Cup: Sri Lanka vs Bangladesh இலங்கை - வங்கதேசம் மோதல்.. டாஸ் ரிப்போர்ட்

Published : Oct 24, 2021, 03:25 PM IST
T20 World Cup: Sri Lanka vs Bangladesh இலங்கை - வங்கதேசம் மோதல்.. டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும், மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. ஷார்ஜாவில் பிற்பகல் நடக்கும் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. இரவு துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இலங்கை அணி:

குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா.

வங்கதேச அணி:

முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!