T20 World Cup: India vs Pakistan பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 24, 2021, 02:55 PM IST
T20 World Cup: India vs Pakistan பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மீது உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. இந்தியாவை உலக கோப்பைகளில் வீழ்த்தியதேயில்லை என்ற அழுத்தமே இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு எமனாக அமைந்துவிடுகிறது.

அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 100% வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக முதல் முறையாக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல்.  3ம் வரிசையில் கேப்டன் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஃபினிஷர் ஹர்திக் பாண்டியா. ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜடேஜா ஆடுவார். அவருடன் மற்றொரு ஸ்பின்னராக இளம் மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆடுவார்.

ஃபாஸ்ட் பவுலர்கள் மூவர். பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக புவனேஷ்வர் குமார் ஆடுவதற்கான வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. ஷர்துல் தாகூர் பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர் என்றாலும், அவரது பவுலிங்கை புவனேஷ்வர் குமாரின் பவுலிங்குடன் ஒப்பிடவே முடியாது. புவனேஷ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். ஆடுகளங்கள் லேசாக ஸ்விங்கிற்கு ஒத்துழைத்தால் கூட புவனேஷ்வர் குமார் எதிரணியின் பேட்டிங் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார். எனவே தரமான ஃபாஸ்ட் பவுலர் என்ற முறையில் புவனேஷ்வர் குமார் தான் ஆடுவார்.

இதையும் படிங்க - கேப்டன்சியிலிருந்து விலகச்சொல்லி நாங்க அழுத்தம் கொடுத்தோமா? யாருடா இதெல்லாம் கிளப்பிவிடுறது? கங்குலி விளக்கம்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!