IPL 2023: SRH vs DC போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய வாஷிங்டன் சுந்தர்

By karthikeyan V  |  First Published Apr 24, 2023, 8:22 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணியின் 3 முக்கியமான விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தை தலைகீழாக திருப்பினார் சன்ரைசர்ஸ் பவுலர் வாஷிங்டன் சுந்தர்.
 


ஐபிஎல் 16வது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இந்த 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.

முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி 2வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

IPL 2023: ஐபிஎல் 16வது சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! அடித்துச்சொல்லும் மைக்கேன் வான்

டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். 

முதலில் பேட்டிங் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, அதன்பின்னர் வார்னரும் மிட்செல் மார்ஷும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் தொடக்க வீரர் வார்னருடன் சர்ஃபராஸ்கான் ஜோடி சேர்ந்தார்.

IPL 2023: தோனியின் கேப்டன்சியில் ஆடினால் எதையும் சாதிக்கலாம் - அஜிங்க்யா ரஹானே(2.0)

இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த நிலையில், 8வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், அந்த ஓவரில் வார்னர்(21), சர்ஃபராஸ் கான்(10) மற்றும் அமான் கான் (4) ஆகிய மூவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்திலிருந்து டெல்லியை வெளியேற்றினார். 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட டெல்லி கேபிடள்ஸ் அணியில் மனீஷ் பாண்டே மற்றும் அக்ஸர் படேல் இணைந்து பேட்டிங் ஆடிவருகின்றனர்.
 

click me!