IPL 2023: SRH vs DC மேட்ச் டாஸ் ரிப்போர்ட்! டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. பிரித்வி ஷா நீக்கம்

Published : Apr 24, 2023, 07:28 PM IST
IPL 2023: SRH vs DC மேட்ச் டாஸ் ரிப்போர்ட்! டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. பிரித்வி ஷா நீக்கம்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.   

ஐபிஎல் 16வது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இந்த 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்குகின்றன.

முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற டெல்லி கேபிடள்ஸ் மற்றும் முதல் 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்ற சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் களமிறங்குகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டி.நடராஜன் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். டெல்லி கேபிடள்ஸ் அணியில்  2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 47 ரன்கள் மட்டுமே அடித்து படுமோசமாக சொதப்பிய பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை பலப்படுத்தும் விதமாக அதிரடி வீரர் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லலித் யாதவுக்கு பதிலாக ரிப்பல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், அக்ஸர் படேல், அமான் கான், ரிப்பல் படேல், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ஹாரி ப்ரூக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!