கோலி கிங் ஆஃப் கிரிக்கெட்.. பயிற்சியில் கூட அவரை அவுட்டாக்க முடியாது..! ஆர்சிபி பவுலர் புகழாரம்

By karthikeyan VFirst Published May 22, 2021, 9:01 PM IST
Highlights

விராட் கோலி கிரிக்கெட்டின் கிங் என்று அவரது கேப்டன்சியில் இந்திய அணியில் மட்டுமல்லாது ஆர்சிபி அணியிலும் ஆடும் வாஷிங்டன் சுந்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனகளையும் குவித்து, 3 விதமான போட்டிகளிலும் அபாரமான பேட்ஸ்மேனாக வலம்வருகிறார்.

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் விராட் கோலி, இதுவரை 70 சதங்களுடன் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி அவரது கெரியர் முடிவதற்குள் தகர்த்துவிடுவார் என்று எதிரபார்க்கப்படுகிறது. 

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக கோலோச்சிவருகிறார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் பல பவுலர்களின் கனவு விக்கெட்டாக திகழ்கிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பு பெற்றிராத பவுலரான வாஷிங்டன் சுந்தர், பயிற்சியில் கூட அவரது விக்கெட்டை வீழ்த்துவது கடினம் என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியிலும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியிலும் கோலியின் கேப்டன்சியில் ஆடுகிறார்.  எனவே கோலிக்கு எதிரணியில் இருந்து பந்துவீசும் வாய்ப்பை சுந்தர் பெற்றதில்லை.

ஆனால் ஐபிஎல்லில் வலைப்பயிற்சியில் கோலிக்காக வீசியுள்ளார். கோலியின் கேப்டன்சியில் ஆடிவரும் சுந்தர், கிரிக் இன்ஃபோ நேர்காணலில் கோலி குறித்து பேசும்போது, கோலி கிங் ஆஃப் கிரிக்கெட். எல்லா சீசன்களிலும் அவரை அவுட்டாக்கியதில்லை. 2 சீசனுக்கு ஒருமுறை வீழ்த்தியிருக்கிறேன்.. அவ்வளவுதான் என்றார் சுந்தர்.
 

click me!