CCL 2023: சென்னை அணியில் இணைந்த விஷ்ணு விஷால் - விக்ராந்த் கூட்டணி: ஆர்யா தான் கேப்டன்!

By Rsiva kumarFirst Published Feb 6, 2023, 5:05 PM IST
Highlights

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 9 ஆவது சீசனில் சென்னை ரைனோஸ் அணியில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.

சிசிஎல் (CCL - Celebrity Cricket League) எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9ஆவது சீசன் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை ரைனோஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், போஜ்புரி தபாங்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷெர் என்று மொத்தமாக 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஏராளமான நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் ஒரு கிரிக்கெட் தொடர் தான் சிசிஎல் (CCL). இந்த தொடரில் மொத்தம் 16 போட்டிகள் நடக்கும். அதில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். வரும் 18 ஆம் தேதி தொடங்கும் சிசிஎல்லின் இறுதிப் போட்டி வரும் மார்ச் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சிசிஎல்: தொடரில் பங்கேற்கும் அணி மற்றும் போட்டி அட்டவணை!

புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும். இந்த இரு அரையிறுதிப் போட்டிகளுமே மார்ச் 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன. 

இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த முதல் சிசிஎல் சீசனில் சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி வெற்றி பெற்றது. 2013 ஆம் ஆண்டு கர்நாடகா புல்டோசர்ஸ், 2014 ஆம் ஆண்டு கர்நாடகா புல்டோசர்ஸ், 2015 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2016 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2017 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2019 ஆம் ஆண்டு மும்பை ஹீரோஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சிசிஎல் சீசன் நடக்கவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடப்பதால், நட்சத்திரங்கள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கின்றனர்.

Shikhar Dhawan Divorce Case: யாராக இருந்தாலும் இதை செய்யக் கூடாது: தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி

அணிகளும், கேப்டன்களும்....

சென்னை ரைனோஸ் - ஆர்யா

கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - குஞ்சாகோ போபன்

கர்நாடகா புல்டோசர்ஸ் - சுதீப்

தெலுங்கு வாரியர்ஸ் - அக்கில் அக்கினேனி

பெங்கால் டைகர்ஸ் - ஜிஸ்ஷூ

மும்பை ஹீரோஸ் - ரித்தேஷ் தேஷ்முக்

போஜ்புரி தாபங்ஸ் - மனோஜ் திவாரி

பஞ்சாப் டி ஷெர் - சோனு சூட்

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சி: ரவீந்திர ஜடேஜா பெருமிதம்!

கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை ரைனோஸ் அணியிலிருந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் விலகினர். அதன் பிறகு இந்த 2023 ஆம் ஆண்டு நடக்கும் சிசிஎல் தொடரின் 9ஆவது சீசனில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் மீண்டும் சென்னை ரைனோஸ் அணியில் இணைந்துள்ளனர். கிரிக்கெட் லீக்கில் கலந்து கொள்ள சென்ற போது நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆர்யா, பரத், ஜீவா, சாந்தனு, விஜய் யேசுதாஸ், சையது ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Womens T20 World Cup 2023: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

 

curtain raiser !! pic.twitter.com/oIS3y5JiBC

— bharath niwas (@bharathhere)

 

click me!