Shikhar Dhawan Divorce Case: யாராக இருந்தாலும் இதை செய்யக் கூடாது: தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி

By Rsiva kumarFirst Published Feb 6, 2023, 3:56 PM IST
Highlights

ஷிகர் தவானின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சமூக வலைதளங்களில் எதையும் பேசக் கூடாது என்று தவானின் முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான். வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் பங்கேற்றார். அந்தப் போட்டிகளில் 7, 8 மற்றும் 3 ரன்கள் என்று மொத்தமாக 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் இடம் பெறவில்லை.

3 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சிசிஎல்: தொடரில் பங்கேற்கும் அணி மற்றும் போட்டி அட்டவணை!

கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆயிஷாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். முதல் திருமணம் முறிவுற்ற நிலையில், தான் தவானை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஷிகர் தவான் அவ்வபோது தனது மகனை சந்தித்து வருவதோடு, 2 மகள்களையும் கவனித்து வருகிறார்.

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சி: ரவீந்திர ஜடேஜா பெருமிதம்!

ஷிகர் தவான் தனது மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளரான தீரஜ் மல்ஹோத்ராவிடம் தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்புவதாகவும் கூறியிருந்தார். இதன் காரணமாக, தனக்கும், தனது பெயர், புகழுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

Womens T20 World Cup 2023: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஷிகர் தவான் குறித்து பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ அல்லது பத்திரிக்கையிலோ தவறான தகவல்களை பரப்ப கூடாது. ஒவ்வொருவரும் தங்களது கடின உழைப்பால் அவர்களுக்கு என்று தனி மதிப்பையும், மரியாதையும் சேர்த்து வைக்கின்றனர். அப்படியிருக்கும் போது தவானின் பெயருக்கும், புகழுக்கும் பாதிப்பு விளைவிக்கும் எதையும் பேசக் கூடாது என்று ஆயிஷா முகர்ஜிக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் வர வேண்டும்: தமிழ்நாடு ரஞ்சி டிராபி உங்கள் கையில் தான் இருக்கிறது - ரவிச்சந்திரன் அஸ்வின்!

click me!