இந்தியாவில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ளணும்..? ஆஸி., வீரர்களுக்கு சூட்சமத்தை சொல்லிக்கொடுத்த ஷேன் வாட்சன்

By karthikeyan VFirst Published Feb 6, 2023, 4:48 PM IST
Highlights

இந்தியாவில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஷேன் வாட்சன் அறிவுரை கூறியுள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

கடைசியாக 2004ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவிற்கு வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஜான்சனின் கேம் சேஞ்சிங் அட்வைஸ்

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதாகமாக இருக்கும் என்பதால் 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.  இரு அணிகளில் எந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, எந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்கிறார்களோ அந்த அணி தான் வெற்றி பெறும்.

இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம். இந்நிலையில், இந்தியாவில் ஸ்பின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

IND vs AUS: கோலி - கில் இருவரில் யார் ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்கவேண்டும்..? கட் & ரைட்டா பேசிய ஹர்பஜன்

இதுகுறித்து பேசியுள்ள ஷேன் வாட்சன், இந்தியாவில் ஸ்பின் பவுலிங்கை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!