புஜாரா மாதிரி ஆடிகிட்டு இருந்த பேர்ஸ்டோவை ரிஷப் பண்ட் மாதிரி ஆட வச்சது கோலியோட ஸ்லெட்ஜிங் தான் - சேவாக்

By karthikeyan VFirst Published Jul 4, 2022, 3:32 PM IST
Highlights

புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவை கோலி ஸ்லெட்ஜிங் செய்து, ரிஷப் பண்ட் மாதிரி ஆடவைத்ததாக சேவாக் கருத்து கூறினார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

பேர்ஸ்டோ 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்களின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார். குறிப்பாக ஷமியின் பவுலிங்கில் திணறினார். 61 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அவர் திணறியதால் அவரை ஸ்லெட்ஜிங் செய்தார் கோலி.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோ நன்றாக ஆடியிருந்தாலும், டிம் சௌதியின் பவுலிங்கில் திணறினார். அதை குறிக்கும் விதமாக சௌதி, சௌதி என கூறி பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

2ம் நாள் திணறிய பேர்ஸ்டோ, 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி 119 பந்தில் சதமடித்தார். கோலியின் ஸ்லெட்ஜிங் பேர்ஸ்டோவுக்கு உந்துகோலாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த வைராக்கியத்துடன் தான் 3ம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் ஆடினார் பேர்ஸ்டோ.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

அதை சுட்டிக்காட்டும் விதமாக, புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்து ரிஷப் பண்ட் மாதிரி கோலி ஆடவைத்துவிட்டார் என்று, கோலியின் ஸ்லெட்ஜிங்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பேர்ஸ்டோவின் ஸ்டிரைக் ரேட்டை பதிவிட்டு டுவீட் செய்திருந்தார் சேவாக்.

Jonny Bairstow's Strike Rate before Kohli's Sledging -: 21
Post Sledging - 150

Pujara ki tarah khel rahe thhey, Kohli ne Pant banwa diya bewajah sledge karke

— Virender Sehwag (@virendersehwag)

அதைக்கண்ட கோலியின் ரசிகர்கள், சேவாக்கை விமர்சித்துவருகின்றனர். சிலர், அவரை வர்ணனையிலிருந்து நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
 

click me!