இந்திய அணியானது இனி இந்த 2 இளம் வீரர்களின் கையில் தான் இருக்கிறது என்று முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இந்தியா தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு 4 ஆம் நாளான இன்றைய ஆட்டத்தை இங்கிலாந்து தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் 15 ரன்களில் நடையை கட்டினார். இதே போன்று 2ஆவது போட்டியில் முதல் இன்னிங்ஸீல் 209 ரன்கள் குவித்து இந்திய அணி 396 ரன்கள் எட்ட முக்கிய காரணமாக இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களில் வெளியேறிய நிலையில், சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தார்.
சுப்மன் கில்லின் சதம் – இங்கிலாந்துக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டீம் இந்தியா!
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தான் ரன்கள் குவித்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பாராட்டு தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியிருப்பதாவது: இளம் வீரர்கள் அணிக்கு தேவை என்ற போது அவர்கள் விளையாடுவதை பார்க்க பார்க்க ஆனந்தமாக உள்ளது.
7 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில், நம்பர் 3ல் சதம் விளாசி சாதனை!
அடுத்த 10 ஆண்டுகளில் இவர்களது ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். அதன் பிறகு இந்திய அணியானது, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது கையில் தான் உள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது