இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கணித்துள்ளார்.
கிரிக்கெட் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் வகையில் விளையாட்டுத் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டிராபியானது முதல் முறையாக விண்வெளியில் ஏவப்பட்டது. அதுமட்டுமின்றி 18 நாடுகளுக்கு உலகக் கோப்பை டிராபியானது இன்று முதல் சுற்று பயணம் செல்கிறது. இறுதியாக முதல் போட்டி நடக்கும் அன்று அகமதாபாத் மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அக்டோபர் 15 என்ன ஸ்பெஷல்? இந்தியா – பாகிஸ்தான் போட்டி அப்போது நடத்தப்பட காரணம்?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் வீரேந்தர் சேவாக், முத்தையா முரளிதரன், ஜெய்ஷா மற்றும் ஐசிசி முதன்மை நிர்வாக் அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியிட்டனர். அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 45 நாட்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது? முதல் போட்டி யாருடன்?
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது.
இதையடுத்து, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் 4 அணிகள் என்னென்ன என்று கணித்துள்ளார். அதில் இந்திய அணியும் ஒன்று என்று கூறிய அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டியில் போட்டி போடும் என்று கூறியுள்ளார். அதிலேயும் பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியாவும் 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்த நிலையில், இந்த உலகக் கோப்பையை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த மனிதர், அவர் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவுகிறார்," என்று அவர் கூறினார்.
பிரித்வி ஷா ஒரு அப்பாவி; எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகை தான்: கோர்ட்டில் மும்பை போலீஸ் விளக்கம்!
இதே போன்று பாகிஸ்தானிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.