IPL 2023: பஞ்சாப்பின் உத்தி சரியானதுதான்.. ஆனால் ரொம்ப லேட்டா பண்ணிட்டாங்க..! சேவாக் அதிரடி

By karthikeyan V  |  First Published May 18, 2023, 6:07 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் கடினமான இலக்கை சிறப்பாக விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி போராடி தோற்ற நிலையில், மந்தமாக பேட்டிங் ஆடிய அதர்வா டைட்-ஐ கொஞ்சம் முன்னதாகவே ரிட்டயர்ட் ஹர்ட் ஆக்கி அனுப்பியிருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், கடந்த சில போட்டிகளாக ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதின.

தர்மசாலாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, ரைலீ ரூசோ மற்றும் பிரித்வி ஷாவின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 213 ரன்களை குவித்தது. பிரித்வி ஷா 38 பந்தில் 54 ரன்களும், ரூசோ 37 பந்தில் 82 ரன்களும் அடித்தனர்.

Tap to resize

Latest Videos

IPL 2023: சூர்யகுமார் யாதவின் போட்டியாளராக உருவெடுத்த சிஎஸ்கே வீரர்..! முன்னாள் வீரர் புகழாரம்

214 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் மட்டுமே அதிரடியாக ஆடி இலக்கை விரட்டினார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிய அதர்வா டைட் 42 பந்தில் 55 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியே சென்றார். அவரால் பெரிய ஷாட்டுகளை ஆடி குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க முடியாமல் திணறியதால் அவர் வெளியேற்றப்பட்டார். அதிரடியாக ஆடி 48 பந்தில் 94 ரன்களை குவித்து கடைசி பந்துவரை நின்ற லிவிங்ஸ்டோனால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவரில் 198 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது. 

இந்நிலையில், அதர்வா டைட்-ஐ முன்கூட்டியே ரிட்டயர்ட் ஹர்ட் ஆக்கியிருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், நானாக இருந்தால் அதர்வாவை கொஞ்சம் முன்னதாகவே ரிட்டயர்ட் ஹர்ட் செய்திருப்பேன். அவர் 42 பந்தில் 70 ரன்கள் அடித்திருந்தால் பஞ்சாப் அணி ஜெயித்திருக்கும். நான் பஞ்சாப் அணியில் இருந்திருந்தால், காயம் என்று சும்மா சொல்லி வெளியேற சொல்லியிருப்பேன். 

IPL 2023: முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் ஆர்சிபி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றால் மீண்டும் தேவைப்பட்டால் பேட்டிங் ஆடமுடியும். ரிட்டயர்ட் அவுட் ஆனால் அது முடியாது. க்ருணல் பாண்டியா அணியின் நலன் கருதிதான் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றார். அதர்வாவை 42 பந்துகள் ஆடும்வரை விடாமல் 36 பந்துகள் ஆடியபோதே ரிட்டயர்ட் ஹர்ட் ஆக்கியிருந்தால், அந்த 6 பந்தில் வேறு வீரர் 15 ரன்கள் அடித்திருந்தால் பஞ்சாப் அணி ஜெயித்திருக்கும். அணியின் நலனுக்காக ரிட்டயர்ட் ஹர்ட் ஆவது தவறல்ல என்று சேவாக் தெரிவித்தார்.
 

click me!