IPL 2023: முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் ஆர்சிபி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 18, 2023, 2:50 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடக்கும் போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

தலா 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு கடைசி ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருப்பதால் இந்த அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கடினம்.

Tap to resize

Latest Videos

13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமுள்ளது. 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு..! பேர்ஸ்டோ கம்பேக்.. ஆர்ச்சருக்கு இடம் இல்லை

அந்தவகையில், கடைசி 2 போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆர்சிபி அணி இன்று சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது. தொடரைவிட்டு வெளியேறிவிட்ட சன்ரைசர்ஸ் அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் பிளே ஆஃபிற்கு முன்னேற ஆர்சிபி அணிக்கு இது முக்கியமான போட்டி.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ஆர்சிபி அணி: 

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், மைக்கேல் பிரேஸ்வெல், அனுஜ் ராவத், வைன் பார்னெல், கரன் ஷர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

IPL 2023: உம்ரான் மாலிக்கை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்..? பிரயன் லாரா விளக்கம்

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், அப்துல் சமாத், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

click me!