பாகிஸ்தான் நடத்தும் காஷ்மீர் சூப்பர் லீக்கில் விராட் கோலி..?

By karthikeyan VFirst Published May 17, 2022, 5:43 PM IST
Highlights

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள அல்லது குறைந்தபட்சம் ஒரு போட்டியை நேரில் வந்து பார்க்க விராட் கோலியிடம் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.
 

இந்தியா - பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியில் நல்லுறவு இல்லாததால் இந்தியா  - பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் ஆடுவதில்லை. இரு அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர்கள் நடத்தப்படுவதில்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே ஆடிவருகிறது.

ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் ஆடுவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியிருக்கையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டும், இரு அணிகளும் இணைந்து ஆடவேண்டும் என்ற கருத்துகள் பரவலாக உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் பேசியிருந்தார். ஆனால் கங்குலி அது, நமது கைகளில் இல்லை என்று கூறிவிட்டார். 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில், கிரிக்கெட் மூலமாக இருநாட்டு உறவை மேம்படுத்த வேண்டும் என்று சிலர் கிளம்பியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தான் காஷ்மீர் பிரீமியர் லீக் தலைவர் ஆரிஃப் மாலிக். அந்தவகையில், காஷ்மீர் பிரீமியர் லீக்கில் ஆட விராட் கோலிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக ஆரிஃப் மாலிக் தெரிவித்துள்ளார். கேபிஎல்லில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாததும் அவரது விருப்பம். ஆனால் அவருக்கு கடிதம் அனுப்பப்படும். கிரிக்கெட் மூலமாக இருநாட்டு உறவை மேம்படுத்த வேண்டும். அந்தவகையில் விராட் கோலிக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். குறைந்தபட்சம் ஒரு போட்டியை நேரில் வந்தாவது அவர் பார்க்க வேண்டும். மற்ற இந்திய வீரர்களை அழைக்கத்தான் விரும்புகிறோம் என்று ஆரிஃப் மாலிக் தெரிவித்துள்ளார். ஆனால் கோலி ஆடுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
 

click me!