MI vs SRH: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 17, 2022, 02:42 PM IST
MI vs SRH: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.   

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன.

எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, ராஜஸ்தான், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 4 அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கேகேஆர், பஞ்சாப், சன்ரைசர்ஸுக்கு கடினமான வாய்ப்புள்ளது. இந்த 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கடினமான காரியம். ஆனாலும் அந்த போட்டியில் உள்ளன.

12 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பின்புற வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணி முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸை இன்று எதிர்கொள்கிறது.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, ராமன் தீப் சிங், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், ரித்திக் ஷோகீன்,டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட்கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!