IPL 2022: வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது டெல்லி கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published May 17, 2022, 12:44 AM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில்  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவடையவுள்ள நிலையில், குஜராத் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. எஞ்சிய 3 இடங்களுக்கு 5 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுவதால் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் கிங்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதின.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா. 
 
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸின் அதிரடி தொடக்க வீரர் வார்னரை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வீழ்த்தினார் லிவிங்ஸ்டோன். மற்றொரு தொடக்க வீரரான சர்ஃபராஸ் கான், அதிரடியாக ஆடி 16 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட்(7), ரோவ்மன் பவல்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் மிட்செல் மார்ஷ். மிட்செல் மார்ஷ் 48 பந்தில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பேட்டிங் ஆட சவாலான இந்த ஆடுகளத்தில் மிட்செல் மார்ஷின் இன்னிங்ஸ் முக்கியமானது.

20 ஓவரில் டெல்லி கேபிடள்ஸை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. லியாம் லிவிங்ஸ்டோன், வார்னர் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய 2 மிகப்பெரிய அதிரடி பேட்ஸ்மேன்களை சோபிக்கவிடாமல் அவுட்டாக்கினார். லிவிங்ஸ்டோனின் பவுலிங் தான் டெல்லி அணியை கட்டுப்படுத்த உதவியது.

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி. 142 ரன்கள் மட்டுமே அடித்து 17  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ்.

click me!