BAN vs SL: டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிதாபமான சாதனை படைத்த ஆஞ்சலோ மேத்யூஸ்

Published : May 16, 2022, 08:14 PM IST
BAN vs SL: டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிதாபமான சாதனை படைத்த ஆஞ்சலோ மேத்யூஸ்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் பரிதாப சாதனை படைத்துள்ளார்.  

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று(மே15) தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் அடித்தது.

இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் (54) மற்றும் சண்டிமால்(66) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிக அபாரமாக பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் 199 ரன்கள் அடித்து, ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

199 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேத்யூஸ் பரிதாப சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 மற்றும் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஒரே வீரர் மேத்யூஸ் தான். இந்த பரிதாப சாதனையை மேத்யூஸ் படைத்துள்ளார்.

2ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் அடித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!