PBKS vs DC: 2 அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்! முக்கியமான போட்டியில் டெல்லி அணியில் 2 மாற்றங்கள்! டாஸ் ரிப்போர்ட்

Published : May 16, 2022, 07:12 PM IST
PBKS vs DC: 2 அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்! முக்கியமான போட்டியில் டெல்லி அணியில் 2 மாற்றங்கள்! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை ஆடிய 12 போட்டிகளில் தலா 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் ஒரே மாதிரியான நிலையில் உள்ளன. எனவே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீகர் பரத்துக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே டேவிட் வார்னருடன் மிட்செல் மார்ஷ் தொடக்க வீரராக இறங்கப்போகிறார். காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத கலீல் அகமது ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்புவதால் சேத்தன் சகாரியா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!