மகளிர் ஐபிஎல் டி20 சேலஞ்ச்.. 3 அணிகளை அறிவித்தது பிசிசிஐ..! மிதாலி ராஜ் இல்லை

By karthikeyan VFirst Published May 16, 2022, 4:15 PM IST
Highlights

மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான 3 அணிகளை அறிவித்துள்ளது பிசிசிஐ.
 

இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டில் ஐபிஎல் நடத்தப்படுகிறது. உலகின் பணக்கார மற்றும் கோடிகள் புரளும் டி20 லீக் தொடராக ஐபிஎல் திகழ்கிறது. இப்போது மகளிர் கிரிக்கெட்டிலும் டி20 லீக் தொடரை அறிமுகப்படுத்துகிறது பிசிசிஐ.

மகளிர் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த தொடர் மே 23ம் தேதி முதல் 28 வரை நடக்கிறது. இந்த தொடரில் வெளிநாட்டு வீராங்கனைகளும் கலந்துகொள்கின்றனர்.

இந்த தொடருக்காக 3 அணிகளை அறிவித்துள்ளது பிசிசிஐ. சூப்பர் நோவாஸ், டிரைல்பிளேசர்ஸ் மற்றும் வெலாசிட்டி என்ற பெயரில் 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 16 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர், டிரைல்பிளேசர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் வெலாசிட்டி அணியின் கேப்டனாக தீப்தி சர்மா ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மிதாலி ராஜ் இந்த சீசனில் ஆடாததால் தீப்தி சர்மா கேப்டன்சி செய்கிறார்.

சூப்பர்நோவாஸ் அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), டானியா பாட்டியா(துணை கேப்டன்), அலனா கிங், ஆயுஷி சோனி, சந்து, டியான்ட்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், மேக்னா சிங், மோனிகா படேல், முஸ்கன் மாலிக், பூஜா வஸ்த்ரகர், பிரியா புனியா, ராஷி கனோஜியா, சோஃபி எக்லெஸ்டோன், சுனே லூஸ், மான்சி ஜோஷி.

டிரைல்பிளேசர்ஸ்: 

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), பூனம் யாதவ் (துணை கேப்டன்), அருந்ததி ரெட்டி, ஹெய்லி மேத்யூஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரியங்கா பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எஸ் மேகனா, சைகா இஷாக், சல்மா கதுன், சுப்ரியா மால், ஷர்மின் அக்டர் எஸ்.பி போகர்கர்.

வெலாசிட்டி அணி: 

தீப்தி ஷர்மா (கேப்டன்), ஸ்னே ராணா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, அயபோங்கா காக்கா, கேபி நவ்கிரே, கேத்ரின் கிராஸ், கீர்த்தி ஜேம்ஸ், லாரா வால்வார்ட், மாயா சோனாவனே, நத்தகன் சந்தம், ராதா யாதவ், ஆர்த்தி கேதார், ஷிவாலி பஹாத்யா, யஸ்திகா ஷிண்டே பிரணவி சந்திரா
 

click me!