PBKS vs DC: நீயா நானா போட்டியில் பஞ்சாப் - டெல்லி பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 16, 2022, 02:51 PM IST
PBKS vs DC: நீயா நானா போட்டியில் பஞ்சாப் - டெல்லி பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.  குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய 3 இடத்திற்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 அணிகளில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை 12 போட்டிகளில் ஆடி தலா 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகும். தோல்வியடையும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு குறையும். எனவே நீயா நானா என பஞ்சாப்பும் டெல்லியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மந்தீப் சிங், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி