LSG vs RR: லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published May 15, 2022, 11:30 PM IST
Highlights

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 24  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டது.

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்தது. 
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம் என்ற நிலையில் லக்னோ அணியும், இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை வலுவாக்கலாம் என்ற நிலையில் ராஜஸ்தான் அணியும் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஜிம்மி நீஷம், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரவி பிஷ்னோய் மீண்டும் களமிறங்குவதால் கரன் ஷர்மா நீக்கப்பட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை 2 ரன்னில் வீழ்த்தினார் ஆவேஷ் கான். ஆனால் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்து ஆடி29 பந்தில் 41 ரன்களை அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 4ம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து 18 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால், சாம்சன், படிக்கல் ஆகிய மூவருமே நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஆனால் அதிரடியாக நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அடித்து ஆடியாக வேண்டிய முக்கியமான கட்டத்தில் இன்னிங்ஸின் 18வது ஓவரில் ரியான் பராக்(19) மற்றும் ஜிம்மி நீஷம் (14) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, டெத் ஓவரில் டிரெண்ட் போல்ட் ஒருசில பவுண்டரிகளை விளாசியதால் 20 ஓவரில் 178 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் அணி.

179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்து 24  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அணி.

click me!