IPL 2022: அறிமுக போட்டியிலயே தோனியிடம் பாராட்டு வாங்கிய குட்டி மலிங்கா..!

By karthikeyan VFirst Published May 15, 2022, 8:54 PM IST
Highlights

அறிமுக போட்டியிலேயே தோனியிடம் பாராட்டு வாங்கினார் குட்டி மலிங்கா மதீஷா பதிரனா.
 

ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக இருந்திருக்கிறது. உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங் ஆகிய இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் அருமையாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அந்தவரிசையில், இலங்கையை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனாவும் இணைந்துள்ளார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் இலங்கை அணியில் இடம்பிடித்து அருமையாக பந்துவீசி 4 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்திய அண்டர் 19 ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனா. 

இலங்கை இளம் ஃபாஸ்ட் பவுலரான மதீஷா பதிரனா, இலங்கை லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட பதிரனாவை, ஆடம் மில்னேவுக்கு மாற்று ஃபாஸ்ட் பவுலராக எடுத்தது சிஎஸ்கே அணி. ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. ஐபிஎல்லில் மும்பை அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்த மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட பதிரனாவின் பவுலிங்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசினார் பதிரனா. அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே ஷுப்மன் கில்லை வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்டியாவையும் அவர்தான் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த ஸ்கோர் 134 ரன்கள் மட்டுமே என்பதால், அந்த இலக்கை அடித்து குஜராத் அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின் பதிரனா குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, பதிரனா மிகச்சிறந்த டெத் பவுலர். மலிங்காவை போலவே வீசுகிறார். அவரது பவுலிங் ஆக்‌ஷனில் தவறூ நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். அவருக்கு பவுன்ஸும் பெரியளவில் இருக்காது. ஆனால் ஸ்லோயர் பந்துகளை அருமையாக வீசுகிறார் என்று தோனி கூறினார்.

மலிங்கா டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர். டெத் ஓவர்களை அருமையாக வீசி மும்பை இந்தியன்ஸுக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில், மலிங்காவை போலவே இவரும் டெத் ஓவர்களை நன்றாக வீசுகிறார் என்று தோனியே சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.
 

click me!