PBKS vs DC: மிட்செல் மார்ஷ் அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸை குறைவான ஸ்கோருக்கு கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்

By karthikeyan VFirst Published May 16, 2022, 9:24 PM IST
Highlights

முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸூம் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா. 
 
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸின் அதிரடி தொடக்க வீரர் வார்னரை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வீழ்த்தினார் லிவிங்ஸ்டோன். மற்றொரு தொடக்க வீரரான சர்ஃபராஸ் கான், அதிரடியாக ஆடி 16 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட்(7), ரோவ்மன் பவல்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் மிட்செல் மார்ஷ். மிட்செல் மார்ஷ் 48 பந்தில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பேட்டிங் ஆட சவாலான இந்த ஆடுகளத்தில் மிட்செல் மார்ஷின் இன்னிங்ஸ் முக்கியமானது.

20 ஓவரில் டெல்லி கேபிடள்ஸை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 160 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்குதான் என்றாலும், இந்த ஆடுகளத்தில் சற்று சவாலானதுதான். 
 

click me!