IND vs SA: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு..! MI இளம் வீரருக்கு வாய்ப்பு

Published : May 17, 2022, 02:21 PM IST
IND vs SA: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு..! MI இளம் வீரருக்கு வாய்ப்பு

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐபிஎல் முடிந்த பின்னர் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 9 முதல் ஜூன் 19  வரை இந்த தொடர் நடக்கிறது.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளதால், அதற்கு முன்பாக இந்த தொடர் நடப்பதால், டி20 உலக கோப்பைக்கான முன் தயாரிப்பாக இந்த தொடரை இரு அணிகளுமே பார்க்கும். அணியின் காம்பினேஷனை முடிவு செய்ய இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளுமே இந்த தொடரை ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன.

இந்த டி20 தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான 16 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஸ்டப்ஸுக்கு தென்னாப்பிரிக்க அணியில் இடம் கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, வைன் பார்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்ஸி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வாண்டர் டசன், மார்கோ யான்சென்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!