எங்களோட டார்கெட் பாகிஸ்தான் இல்ல.. டிஆர்பி-க்காகலாம் நான் பேச மாட்டேன்.. தெறிக்கவிட்ட கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 1:16 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சும்மா தெறிக்கவிட்டுள்ளார். 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலக கோப்பை போட்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்..?

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவிலான ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளனர். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இந்திய அணியின் கேப்டன் கோலி. 

அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விராட் கோலி பதிலளித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சிறப்பான போட்டியாகவெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மற்ற போட்டிகளை போல இதுவும் ஒரு போட்டி அவ்வளவுதான். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நன்றாக ஆடினாலும் இல்லாவிட்டாலும், இத்துடன் உலக கோப்பை தொடர் முடிந்துவிடப்போவதில்லை. எனவே ஒரு அணியாக எங்களது கவனம் இந்த போட்டியின் மீது மட்டுமே அல்ல. அதைவிட பெரிய விஷயத்தில்தான் கவனம் உள்ளது. அனைத்து வீரர்களுமே பொறுப்பை பகிர்ந்துகொள்கிறோம். போட்டி முழுவதுமாக நடந்தாலும் சரி அல்லது மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டாலும், அந்த சூழலுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என நம்பிக்கையாக தெரிவித்தார்.

இந்நிலையில், முகமது அமீரை கோலி எதிர்கொள்வது குறித்த கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த கோலி, டிஆர்பிக்காகவோ பரபரப்பு தலைப்புகளுக்காகவோ நான் எதையும் பேசமாட்டேன். எந்த பவுலராக இருந்தாலும் அவரது திறமைக்கு மதிப்பு கொடுக்கப்படும். என்னை பொறுத்தமட்டில் நான் எப்போதுமே பவுலர் யார் என்று பார்ப்பதில்லை. ஒன்று சிகப்பு பந்து அல்லது வெள்ளைப்பந்து அப்படித்தான் நான் பார்ப்பேன். எனது கவனமும் அதுதான் என்று நறுக்குனு பதிலளித்தார். 
 

click me!