உலக கோப்பையில் களமிறங்கும் முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா..? செம சான்ஸ் அவருக்கு.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 12:00 PM IST
Highlights

கிரிக்கெட் உலகின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் காயமடைந்திருப்பதால், அவர் இந்த போட்டியில் ஆடமாட்டார். எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார். 
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை விட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். 

முதன்முறையாக உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களம் காண்கின்றன. 

கிரிக்கெட் உலகின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் காயமடைந்திருப்பதால், அவர் இந்த போட்டியில் ஆடமாட்டார். எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார். 

ராகுல் இறங்கிவந்த நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் சங்கர் நான்காம் வரிசையை கருத்தில்கொண்டு இந்திய அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் ராகுல் நான்காம் வரிசையில் நன்றாக ஆடியதால் விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்தது. தற்போது தவான் காயம் காரணமாக ராகுல் தொடக்க வீரராக இறங்குவதால், விஜய் சங்கருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். 

விஜய் சங்கரின் பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு அவரே அணியில் எடுக்கப்படுவார். தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இருக்கமாட்டார். விஜய் சங்கர் அணியில் இணைவதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 
 

click me!