கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 10ஆவது ஐபிஎல் போட்டியில் விராட் கோலி கடைசி நின்று விளையாடிய ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்துள்ளார்.
பெங்களூருவின் கோட்டை என்று சொல்லப்படும் எம்.சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 8, ரஜத் படிதார், 3, அனுஜ் ராவத் 3 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேமரூன் க்ரீன் 33 ரன்னும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்னும் எடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 83 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதானையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும், ஹென்ரிச் கிளாசெனிடமிருந்து ஆரஞ்சு கேப்பை திரும்ப பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இதே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்தார். சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 181 ரன்கள் குவித்துள்ளார்.
முதல் 2 போட்டிகளில் 98 ரன்கள் எடுத்த நிலையில் ஆரஞ்சு கேப் வென்றிருந்தார். ஆனால், ஹென்ரிச் கிளாசென் 63 மற்றும் 80 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் ஆரஞ்சு கேப்பை விராட் கோலி தன் வசப்படுத்தியுள்ளார்.
VIRAT KOHLI HAS MOST SIXES IN RCB HISTORY 🔥 pic.twitter.com/FvigoMesS8
— Johns. (@CricCrazyJohns)