கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங்ச் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
பெங்களூருவில் ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
வெற்றி யாருக்கு? மாற்றத்துடன் களமிறங்கிய கேகேஆர் – டாஸ் வென்று பவுலிங்!
பாப் டூப்ளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 33 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ரஜத் படிதார் 3, அனுஜ் ராவத் 3 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். கோலி 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சாக்ஷி அண்ணிக்கு பிறகு தோனி பாய் என்னயத்தான் தூக்கியிருக்காரு – தோனியை கிண்டலடித்த ஜடேஜா!
தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர் உள்பட 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேகேஆர் அணியில் ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரஸல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.