ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் தங்களது சண்டையை மறந்து சமரசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி இலக்கை விரட்டிக்கொண்டிருந்தபோது 17வது ஓவரில் நவீன் உல் ஹக் வைடுக்கு ரிவியூ செய்தார். அந்த சம்பவத்தின் போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி ஷூவை காட்டி ஆவேசமாக பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டிக்கு பின்னும் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடங்கியது.
VIDEO OF THE DAY. ⭐
- Gambhir hugging & having a chat with Virat Kohli. pic.twitter.com/UIZfOkILCD
வரிசையாக நடையை கட்டிய வீரர்கள் – கடைசி வரை மாஸ் காட்டிய கோலி – ஆர்சிபி 182 ரன்கள் குவிப்பு!
போட்டிக்கு பின் விராட் கோலியிடம் லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் பேசிக்கொண்டிருக்க, அவருடன் (கோலி) என்ன பேச்சு என்கிற தொனியில் கைல் மேயர்ஸின் கையை பிடித்து இழுத்துச்சென்றார் கௌதம் கம்பீர். அதன்பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, மற்ற வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கம்பீர் - கோலி இருவருமே களத்தில் ஆக்ரோஷமானவர்கள். சண்டைக்கு தயங்காதவர்கள். வந்த வம்பையும் விடமாட்டார்கள்; வம்பிழுக்கவும் தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்ட, விட்டுக்கொடுக்காத இருவருக்கு இடையே பரஸ்பரம் மோதல் ஏற்பட்டால் சொல்லவா வேண்டும்? இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் இரு அணியினரும் வந்து இருவரையும் அழைத்து சென்றனர்.
வெற்றி யாருக்கு? மாற்றத்துடன் களமிறங்கிய கேகேஆர் – டாஸ் வென்று பவுலிங்!
இது அப்போது நடந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு காம்பீர் மற்றும் கோலி இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டும், கட்டியணைத்துக் கொண்டும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். கேகேஆர் அணியின் ஆலோசரகாக அணிக்கு காம்பீர் திரும்பியுள்ளார். கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான 10ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், கேகேஆர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகளை இழந்தாலும், விராட் கோலி மட்டும் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் எடுத்தார்.
சாக்ஷி அண்ணிக்கு பிறகு தோனி பாய் என்னயத்தான் தூக்கியிருக்காரு – தோனியை கிண்டலடித்த ஜடேஜா!
இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 182 ரன்களை எடுத்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த போட்டியின் போது சியட் ஸ்ட்ரேடெஜிக் டைம் அவுட்டின் போது மைதானத்திற்குள் வந்த காம்பீர், விராட் கோலியை சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு கை கொடுத்து, அவரது பேட்டிங்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.