இன்னும் தனது சிறப்பான ஆட்டம் வரவில்லை என்றும், வரும் ஐபிஎல் 2023ல் இது கண்டிப்பாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்று பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா பல சாதனைகளை படைத்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது. இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆடிய இந்தியா 248 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஓபனராக பெற்ற வெற்றிக்கு டேட்டா அனாலிட்டிக்ஸ் தான் காரணம் - ரோகித் சர்மா பெருமிதம்!
இந்த ஒரு நாள் தொடரைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி ஐபில் தொடர் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மும்பையில் ஜூஹு பகுதியில் நடந்த இந்திய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி தனது ஆட்டம் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சிறந்த ஆட்டம் இன்னும் வரவில்லை. இது ஐபிஎல் 2023ல் நடக்கும் என்று நம்புகிறேன். நான் உண்மையில் விரும்பும் நிலைக்கு வர முடிந்தால் அது அணிக்கு உதவும் என்று கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த இந்திய விருதுகள் வழங்கும் விழாவில் கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தனது மனைவி அனுஷகா சர்மாவுடன் கலந்து கொண்டு ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். இதற்காக அவர், டார்க் நீல நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். அனுஷ்கா சர்மாவும், நீல் நிற உடையில், காதுகளில் டைமண்ட் நகை அணிந்து வந்தித்தார். இருவரும் ஒன்றாக ரெட் கார்பெட்டில் வலம் வந்தனர். இதே போன்று மற்றொரு வீரர் சுப்மன் கில்லும் இந்த விழாவில் கோட் சூட் அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின், ஜாகீர் கான் உள்பட 3 முறை டக் அவுட்டில் வெளியேறிய கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை டைட்டில் வென்றுள்ளது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை டைட்டில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.