கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் 2024 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக டிவிலியர்ஸ், கெயில் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ஐபிஎல் 10ஆவது போட்டி நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மொத்தமாக 241 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரையில் தோனி 252 போட்டிகளில் 232 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
தோனியின் இந்த சானையை வெறும் 240 போட்டிகளில் 241 சிக்ஸர்கள் விளாசி முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி கிறிஸ் கெயில் (239 சிக்ஸர்கள்), ஏபி டிவிலியர்ஸ் (238 சிக்ஸர்கள்) ஆகியோரது சாதனையையும் முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 109 சிக்ஸர்கள் பிடித்துள்ளார். இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் 175 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
VIRAT KOHLI HAS MOST SIXES IN RCB HISTORY 🔥 pic.twitter.com/FvigoMesS8
— Johns. (@CricCrazyJohns)