ரூ.50 லட்சம் வேஸ்ட்: ரஜத் படிதார் எதுக்கு அணியிலிருந்து தூக்குங்க – கோபத்தில் கொந்தளிக்கும் ஆர்சிபி ரசிகர்கள்!

By Rsiva kumarFirst Published Mar 30, 2024, 11:01 AM IST
Highlights

ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரஜத் படிதார் 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் அவரை எல்லாம் ஏன், அணியில் வைத்திருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கடந்த 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ.20 லட்சத்திற்கு ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடிய ரஜத் படிதார் தற்போது இந்த சீசனில் ரூ.50 லட்சத்திற்கு இடம் பெற்று விளையாடி வருகிறார். சிஎஸ்கே போட்டியைத் தொடர்ந்து ஹோம் மைதானமான பெங்களூருவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஆர்சிபி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட இந்தப் போட்டியில் விளையாடிய ரஜத் படிதார் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக நேற்று நடந்த ஹோம் மைதான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரஜத் படிதார் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலமாக இதுவரையில் நடந்த 3 போட்டிகளில் ரஜத் படிதார் மொத்தமாக 21 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்சிபி அணியில் சுயாஷ் பிரபுதேசாய், மகிபால் லோம்ரார், வில் ஜாக்ஸ், மனோஜ் பாண்டேஜ், லாக்கி பெர்குசன் என்று யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். தொடர்ந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வரும் ரஜத் படிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை அணியிலிருந்து தூக்க வேண்டும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

click me!