ஐபிஎல் டிரெண்டை மாற்றி முத்திரை பதித்த கேகேஆர் – புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Mar 30, 2024, 12:21 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 10ஆவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல்லில் ஹோம் மைதான அணி வெற்றி என்ற டிரெண்டை மாற்றிய முதல் அணி என்ற முத்திரையை பதித்துள்ளது.


சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்கியது. இதுவரையில் 10 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில், நேற்று வரை நடந்த 9 லீக் போட்டிகளில் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் நடந்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த 2 போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மொகாலி முல்லன்பூரில் நடந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6ஆவது லீக் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தான், இன்று 10ஆவது லீக் போட்டி எம். சின்னச்சுவாமி மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. விராட் கோலி மட்டும் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்தார்.

Tap to resize

Latest Videos

பின்னர், 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடி 39 ரன்கள் எடுக்க கேகேஆர் 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரையில் நடந்த 9 லீக் போட்டியிலும் ஹோம் மைதான அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டிரெண்டை மாற்றி முதல் முறையாக கேகேஆர் பெங்களூருவில் வெற்றி கண்டுள்ளது. அதோடு, ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி 5 போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 6ஆவது போட்டியிலும் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இதுவரையில் இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் இந்த போட்டி உள்பட 19 போட்டிகளில் கேகேஆர் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று கேகேஆர் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

click me!